வியாழன், ஏப்ரல் 08, 2004

மழை-3, துளி-2

வன்மையாய் வாழ்க்கையை வாழ்ந்துவிடு !
-அ. சிவகாமசுந்தரி (a.sivagamasundari@gail.co.in)


மலராக மணம் வீசி
மகிழ்வித்தது போதும்
முள்ளாக மாறக் கற்றுக்கொள்

தென்றலாய் தவழ்ந்து
வீசியது போதும்,
புயலாகச் சீறிப் பாய்

மயிலாக அசைந்து
ஆடியது போதும்
மதகையாய் வீரநடை போடு

கிளியாகக் கொஞ்சிப்
பேசியது போதும்
சிங்கமெனக் கர்ஜனை செய்

ஆறாக அமைதியாய்
ஓடியது போதும்
வெள்ளமெனப் பாய்ந்து செல்

பசுவெனப் பதுங்கி
வாழ்ந்தது போதும்
புலியாகப் புறப்படு வெளியில்

கோழிக்குஞ்சாய் ஓடி
ஒளிந்தது போதும்
வல்லூறாய் வானத்தில் பற

தீபமெனத் திரியாய்
எரிந்தது போதும்
தீக்குழம்பாய் ஒருமுறை குமுறு

மென்மையாய்ப் பெண்ணாக
அழிந்தது போதும்
வன்மையாய் வாழ்க்கைய வாழ்ந்து விடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக