புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி - 20

நகரமும் நானும் -அ.சிவகாமசுந்தரி

எங்கு பார்க்கிலும்
இறுகிய முகங்கள்
உதட்டில் புன்னகை
உள்ளத்தில் வஞ்சனை

பெரிய விஷயங்களைப்
பற்றிப் பேசும்
சிறிய மனிதர்கள்

நம்பிக்கை நார்அறுந்து
நடுவழியில் வீழ்ந்ததுபோல்
நானிருக்கும் நிலை

சுற்றும் பூமி
சுற்றும் மனிதர்கள்
சுழற்காற்றில் சேர்ந்து
சுற்றும் சிறுதூசாய் நான்

வெற்றி என்பது
சில நேரங்களில்
ஒட்டிக்கொண்டு
இருப்பதுதான் போலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக