புதன், ஏப்ரல் 07, 2004

மழை-1 துளி-22


நம்பிக்கை -- சித்ரா விசுவநாதன்
( chitravisu@hotmail.com)


மனிதர்களிடம்
எனக்கு இன்னும்
நம்பிக்கை
இருக்கிறது.

எங்கெல்லாம் பெண்மை
அவமானப்படுத்தப் படுகிறதோ
அங்கெல்லாம் ஒரு ஆண் குரல்
ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

எங்கெல்லாம் முதுமை அலட்சியப்படுத்தப் படுகிறதோ
அங்கெல்லாம் ஒரு நேசக் கரம்
நீண்டு கொண்டுதான் இருக்கிறது.

எங்கெல்லாம் வாழ்க்கை
கண்ணீராய்க் கரைகிறதோ
அங்கெல்லாம் ஒரு எரிமலை
வெடித்துக்கொண்டுதான் இருக்கிறது

எங்கெல்லாம் சுமைகள்
பாரமாய் கனக்கிறதோ
அங்கெல்லாம் தோழமை
தோள் கெடுக்கத்தான் -சய்கிறது.

எங்கெல்லாம் ஏழ்மை
வாழ்க்கையாய்ப் போனதோ
அங்கெல்லாம் ஒரு புரட்சிப் பூ
பூத்துக் கொண்டுதான் இருக்கிறது.

எங்கெல்லாம் மானுடம்
தேவையாய் இருக்கிறதோ
அங்கெல்லாம் மனிதன்
தோன்றிக் கொண்டுதான் இருக்கிறான்

மனிதர்களிடம்
எனக்கு இன்னும்
நம்பிக்கை
மிச்சமிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக