தூக்கம்.... ஜோ (djkpandian@gail.co.in)
விழிவாசல் மூட
சொர்க்க வாசல் திறக்கும்
ஐம்புலன்களின் ஆரவாரமும்
அரை அங்குல விழிக்குள் அடங்கும்
ஆழ்நித்திரையில்
அகிலமும் கரையும்
சிந்தனை நீர்த்துளிகள்
சொப்பன வாய்க்காலில் கலக்கும்
அசைவற்ற நிலையில்
இசைபாடும் இன்மனது
துயிலில் தோய்கையில்
முகிலில் நடப்பதாய்த் தோன்றும்
தூ..க்...க....ம்
உச்சரிக்கும்போதே
புலன்கள் தளரும்
மவுனம் தழுவும்
சிந்தனை நழுவும்
இமைகள் வழுக்கும்
தூக்கம்...
கவலை சுமந்தவனுக்கு
சஹாரா !
சோம்பேறிக்கு
சொந்தவூர் !
களைத்தவனுக்கு
சுவிட்சர்லந்து !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக