நவுத்த பட்டாசு -சகாரா
உழைத்து ஓடாகும் நிமிட வறட்சிகளில்
இதயவடிவ முகங்களின் ரத்தநாளங்களும்
புன்னகைக்க மறுக்கும்.
கடற்கரையில் அலையடிக்கும்
சிந்தனைகளில் தெறித்த சிப்பி ஓடுகள்
முத்தை ஞாபகப்படுத்தாமலேயே
தொலைந்து போகும்.
இறுக்கத்திலிருந்து
தப்பிச்செல்லத் துடிக்கும் மேகம்
கவலையோடு
கண்ணீரைச் சேமிக்கும்.
சகாவின் மரணத்தைச்
சகிக்காது அழும் காகங்கள்
எலியின் சாவுக்கோ
ஏகமாய்த் தவமிருக்கும்.
ஈரத் தானியத்தை
ஒவ்வொன்றாய் உலரவைக்கும்
எறும்பு சமர்ப்பிக்கும்
துண்டு விழாத
உபரி பட்ஜெட்.
அறியாத இந்தியம்
அவதியில் முனகும்
அயல்நாட்டுக் கடன்களின்
வட்டிச் சுமைகளில்
வங்கொடுமைப் பசியை
தா
ரா
ள
ம
ய
மா
க்
கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக