வாழ்வின் இலக்கு ... வாழ்க்கைக் கணக்கு
அவரவர் வாழ்க்கை
அவரவர் இலக்கு
அடைவதும் விடுவதும்
அவரவர் கணக்கு!
இரவல் இலட்சியம்
இலக்கடைவதில்லை.
சொந்தக் கனவுகள்
தோற்றதாய்க் கதையில்லை!
கனவுகள் யார்க்கும்
இலவசம்.
கனவு இலக்காவது
தத்துவம்.
கனவுக் கோட்டில்
வாழ்ந்து முடித்தால்
வாழ்ந்த திருப்தி
வருவது நிச்சயம்.
கனவுகள் சுலபம்
இலக்குகள் கடினம்.
உன்னால் முடிந்தவரை
மரமாய் நிழ்ல் கொடு.
மனிதனாய் அன்பு கொடு.
இலக்குகள் மட்டுமல்ல
வாழ்க்கையும் சுலபமாகும்!
அவரவர் வாழ்க்கை
அவரவர் இலக்கு
அடைவதும் விடுவதும்
அவரவர் கணக்கு!
--சித்ரா விசுவநாதன்.