புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி - 22

கீழ்வானத்தில் ஒரு கேள்விக்குறி - சகாரா

மாடியேறும்போது
கால்க்கொலுசு பார்த்துப் பெருமூச்சு விடுவோரின்
கண்கள் பொசுக்கி -

அக்கம் பக்கத்தார் முகங்களில்
அவ்வப்போது வழியும்
அசடு துடைத்து -

முதலாளியின் முள்முகத்தைப்
புன்னகையால்
தடுத்து -

தொலைபேசியில் கேட்கும்
ஆகாசக் குரல்களை
பதிலால் மடக்கி -

சாலையில் விரைந்தோடும்
வாகனங்களின்
பேரிரைச்சலை விலக்கி -

நெரிசல் காட்டும்
கசகசத்த மக்களின்
வாய்ச்சத்தம் தவிர்த்து -

அல்டாப்புக்காட்டிப் பசப்பும்
அறுவை வாடிக்கையாளரின்
வெறும்பேச்சுச் சகித்து -

கேட்போருக்குக் கேட்கும் பாடலை
பதிவுசெய்து தருகிறாயே
முகஞ்சுழிக்காமல் -

நான் கேட்கும் என் காதலைப்
பதிவு செய்து தருவாயா
உன் உள்ளக் கேசட்டின்
மெல்லிய ஓரத்தில் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக