புதன், ஏப்ரல் 07, 2004

மழை-1 துளி-18

வரதட்சணை - ஜோ (djkpandian@gail.co.in)

காதலைப் புதைத்து
போகத்தில் சாந்து குழைத்து
வியாபாரச் செங்கலிட்டு
கட்டும் அதிகாரக் கல்லறை !

காதல் உணர்வுக்குத் தீயிட்டு
எரிந்த சாம்பலால்
வரைந்த ரங்கோலி !

உணர்வைச் சிதைத்து
உயிரை அழித்து
சிதைக்கு விழா எடுக்கும்
சீரற்ற மாந்தர் செயல் !

சிரிக்க நினைத்த
செடி, மலர்களைப்
பறித்தெடுத்து அமிலாபிஷேகம் !

துள்ள நினைத்த
மீனின் காலுக்கு
துவண்டு விழ
விழுந்த கல்லடி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக