புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி - 24


ஓர் இந்தியத் தென்றலுக்கான திசைகள்
( ஷெல்லியின் Lines to an Indian Air என்ற கவிதையின் தமிழாக்கம் -சகாரா.)


இரவின் இனிய
உன் முதல் தூக்கக் கனவுகளிலிருந்து
நான் விழித்தெழுகிறேன்.

காற்று
மிகமென்மையாய் வருடுகையில்
நட்சத்திரங்கள்
ஒளிமயமாய்ப் பளிச்சிடுகையில்
நான் உன் கனவுகளிலிருந்து
விழித்தெழுகிறேன்.

இனியவளே !
என் பாதத்தினின்றும்
அடியெடுத்து வைக்கும் ஓர் ஆன்மா
உன் ஜன்னலுக்கென்னை
வழிநடத்துவது
எப்படியென
யாரே அறிவார் ?

வீறிட்டலையும் காற்று
இருளடைந்த
மொஉன நீரோடையில் மூழ்கி
மூச்சுத் திணறுகிறது !

செண்பகப் பூக்களின் நறுமணம்
ஒரு கனவில் சிதறும்
இனிய நினைவுகள்போல்
தோற்றோடுகிறது !


அன்பே !
எனக்குள் நீ எப்படியோ
அப்படியே நானும்
உனக்குள் உறைய வேண்டுமென்பது
ராப்பாடிக் குருவியின்
இதயத்தில் எழுதப்பட்ட புகார் ஆகும்.

ஆம்
உனது புல்வெளியிலிருந்து என்னை
உயரே தூக்கு
அங்கிருந்து நான் தவறி விழுந்து
மூர்ச்சையடைந்தபடியே
மரணமுற வேண்டும் !

முத்தங்களுக்குள்ளான உன் அன்பு
என் இதழ்களிலும்
வெளுத்த என்
இமைகளிலும் பொழியட்டும்

என் கன்னம் குளிர்ந்து வெளிர
அந்தோ என் இதயம்
விரைவாய்
சப்தத்தோடு துடிக்கிறது !

அன்பே ! அதை
மீண்டும் ஆழ்த்து -
உனக்கருகில்
எங்கே அது கடைசியாய்
வெடித்துச் சிதறுமோ
அங்கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக