--செந்தில் அரசு sendeee@yahoo.com
தெரிந்திருக்க நியாயமில்லை
இணையத்தில் அரட்டை அடிக்கும்
இவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை
கடிதங்களின் உணர்ச்சி மொழி...........
கலி
கொடுத்த கடன் வசூலிக்க
இனி எப்போதும் இவன்
வரப்போவதில்லை என
சொல்லாமல் சொல்லும்
கல்லறையின் சில பூக்கள்.
மணம்
நான் காதலிக்கப்பட்டவன்
என்று எல்லோரும் சொல்கிறார்கள்
சவ ஊர்வலம் கடந்து போனதை
பூக்களின் வாசனை
சொல்லாதா என்ன ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக