விதிவிலக்குகள் -சகாரா
1.
"யார்றா இங்கே
கள்ளச்சாராயம் காய்ச்சறவன் ?
வாடா ஒருகை பார்க்கலாம் "
கத்தியபடியே ஓடிய போலிஸ்காரர்
"நீ காச்சு தலைவா
எவன் வந்து தடுக்கறான்னு பார்க்கலாம் "
சொல்லியவாறே திரும்பி வந்தார்
ஒரு'கை' பார்த்து.
"எவண்டா இங்கே
ஆபாசப் படம் ஒட்டறவன் ?
கிழிங்கடா
அவனையும் அவன் படத்தையும்..."
கூவியபடியே ஓடிய தாடிக்காரன்
"நீ ஒட்டு மச்சி
எவன் வந்து
....புடுங்கறான்னு பாத்துடுவோம்"
என்றவாறு வந்தான்
கையில் ஓர்
படத்துடன்.
2.
எங்கணும்
ஆளை ஆள் விழுங்கும்
துரோகத்தின் அணிவகுப்பு.
தர்மந்தாங்கும் சொற்களில்
அநியாயப் பூத்தூவி
நடக்கிறது அர்ச்சனை.
அவனவனும் தன் இருப்பைக் காட்ட
நடத்துகிறான்
அதிகார அடிதடி.
உள்ளத்தில் எரிந்தாலும்
மூக்கிற்குக் கீழே மலரத் தவிக்கிறது
உதடு கொன்ற புன்னகை.
தனியொருவனுக்காக
தயங்காமல் அழிக்கப்படுகிறது
ஜெகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக