தொண்டன் - தாந்தோணி
'ஏழையென்றும் அடிமையென்றும்
எவனுமில்லை ஜாதியில்'
கத்திக் கத்தி
வறண்டது தொண்டை.
'தனி'க் குவளையில் கிடைத்தது
தண்ணீர்...
'எல்லோரும் எல்லாமும் பெறுவதான
இடம் நோக்கி' நடந்து நடந்து
காலொடிந்துபோனது நம்பிக்கை...
'ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்கிறேன்'
சிரித்துப் பார்த்தான் ஏழை,
சிக்கவில்லை இறைவன்.
'ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்'
சொன்னவன் செத்தான் என்றோ..
செய்தவன் அலைகின்றான்
கஞ்சிக்குக் கையேந்தி.
'அவர் வாழ்க ! இவர் வாழ்க !'
அவனும் இவனும் வாழ
முழங்கிய உவன்
செத்தான் பசி கண்டு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக