புதன், ஏப்ரல் 07, 2004

மழை-1 துளி-19

வலி - கைகாட்டி

உன் தளிர்முகம் காண
தலைநகரம் தாண்டி

உன்பெயர் சொல்லித் துடிக்கும்
இதயமேந்தி

இளங்குயிலுன்
குரலின் அடயாளங்களை
மனதில் நிறைத்து

எந்த முகம் கண்டால்
எல்லாம் மறந்துவிடுமோ
அம்முகம் தேடி

என் உயிரின் பாதியை
ஆறேழு மாதங்கள் கழித்து,
அருகில் பார்க்கின்ற
ஆவல் நிறைத்து

காதல் தாகத்துடன்
அன்பு கசிய ஓடி வந்தேன்.

வறண்டு,
வதங்கி வந்த என்னை
உன் புன்னகையால்
ஒரு தண்ணிர் ஒத்தடமாய்த்
தழுவாவிடினும்

ஒரு புன்னகை,
ஒரு ஹலோ
ஒரு கையசைப்பு
ஒரு கனிவான பார்வை

ஏதுமற்று
உதடுகள் துடிக்க,
மனது வலிக்க

மீட்டெடுக்க முடியாது
நொறுங்கிய கோட்டையுடன்
யாரையும் நோக வழியற்று,
விழிநீர் வழி மறைக்கத்
திரும்பி வந்தேன்.

என் இராஜகுமாரியே!!

உன் இருத்தலின் பொருட்டு
இரவும் பகலும்
உயிரின் துளியால்
என் இதயத்தளத்தில்
எழுப்பிய கோவிலுக்கு
அழைக்க வந்த என்னை
இப்படிச்
சிலுவையில் அறைந்து கொன்றதேன் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக