படைப்புகள் --- அ.சிவகாமசுந்தரி
(a.sivagamasundari@gail.co.in )
நீ படைத்த ஓவியமாய்
நான் இருக்க
நான் செதுக்கிய சிற்பமாய்
நீ மிளிர
ஓவியமும் சிற்பமும்
ஒரு நாளும்
படைத்தவனுக்கு சொந்தமாய்
இருந்ததில்லையே!
விலை நூறு பெற்று
விரும்பியோர் கைகளிலே
விற்பனைக்குப் போன
சிற்பமாய் நீ
வாங்குவோர் இருந்தும்
விலைபோக முடியாமல்
வீதியிலே கரையும்
ஓவியமாய் நான் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக