புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி - 11

தோழமை --- எம். ஜெயப்பிரகாஷ், புலியூர்

சோகம் பருகும் தருணங்களில்
ஆறுதலாய் வார்த்தை பேசுகிறாய்.

அரைகுறையாய் செய்திருந்தாலும்
அருமையாக உள்ளதென பாராட்டுகிறாய்.

எதிர்கால பயம் வந்தால்
நல்லதே நடக்குமென கையணைக்கிறாய்.

தவறு செய்யும் பொழுதுகளில்
தட்டிக் கொடுத்துத் திருத்துகிறாய்.

நெருக்கடி நேரங்களில்
நெருங்கித் தோள் கொடுக்கிறாய்

நல்லதோ, கெட்டதோ,
எப்பொதுமென்னை நீங்காதிருக்கிறாய்.

என் தோழனே!
இத்தனைக்கும் மாற்றாய்

வேறென்ன நான் தந்துவிட முடியும் ?
தோழமை தவிர...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக