தீபம் ஏற்றட்டும் தீக்குச்சிகள் - சித்ரா விசுவநாதன்
(chitravisu@hotmail.com )
பற்றி எரியும்
பிரச்சனைகள் முடிய
தீப்பந்தம் ஏந்த வேண்டாம்
இளைஞனே!
தீபம் ஏந்தி வா!
தீப்பந்தம் அழிவு.
தீபம் வெளிச்சம்.
வெளிச்சம் தான் நம்
உடனடித் தேவை!
மனிதாபிமான
வெளிச்சம் பரவ
முதல் தீபம் ஏந்தி வரும்
மனிதன் காலடியில்
மண்ணைக் காணிக்கையாக்குவோம்!
போர்கள் வேண்டாம்
பேச்சு வார்த்தை போதுமென்று
முழக்கமிடும்
முதல் மனிதனிடம்
நாட்டை ஒப்படைக்க
நாங்கள் தயார்!
எங்கள் இளைஞர்கள்
உரசினால் பற்றிக் கொள்ளும்
தீக்குச்சிகள்!
தீக்குச்சி கொண்டு
தீப்பந்தம் கொளுத்துவதோ
தீபம் ஏற்றுவதோ
நம் கையில் இருக்கிறது.
தீப்பந்தம் அழிவு!
தீபம் வெளிச்சம்!
மதம் பிடித்த
மதங்களை விடுத்து
மனிதநேயத்துக்குத் திரும்பும்
மனிதன் ஏற்றும்
தீபத்தின் ஒளியில்
விடியட்டும் இந்த
மண்ணின் பொற்காலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக