புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி - 19

தெரியவில்லை

மழை விதைத்தாய் என் விழிகளில்!
நனைவதும் கரைவதும்
நானல்ல.. நம் உறவு!


உன் வார்த்தைகளால்
என் நாக்கைப் பிடுங்கிக்கொண்டாய்,
சோளக்காட்டுப் பொம்மையாய்
சொற்களின்றி
விழித்துக் கொண்டிருக்கிறேன்!

நம்மை நாமே தொலைத்து விட்டு
உலகத்துப் பார்வைக்காய்
நடித்துக் கொண்டிருக்கிறோம்!

உறவுக்கோளங்களை விட்டு
பிரிந்து விடலாம் -ஆனால்
உணர்வுகளில் என்றும் என் சுவாசம் நீ!

மாலையில் வாடும் உயிருள்ள பூவா
இல்லை,
என்றும் வாடாத உயிரற்ற காகிதப்பூவா
நம் உறவு எந்த வகை?

யார் யாருக்காகவோ
நம்மை நாமே அழித்துக்கொண்டோம்;
நமக்காக என்ன செய்தோம்
உள்ளுக்குள் அழுவதைத்தவிர....

ஊர் சிரிக்காமலிருக்க
நாம் சிரித்துக்கொண்டே
பிரிந்தோம்! -ஆனால்
யாருக்குத் தெரியும்
நாம் சேர்ந்து அழுது கொண்டிருப்பது ...?

---P.Muthukumar (yemkay_ps@yhaoo.com)

jpg வடிவத்தில் இங்கு படிக்கலாம்