மலரட்டும் மனிதநேயம் ---சித்ரா விஸ்வநாதன்.
எரிக்க வேண்டிய ராவணர்கள்
எத்தனையோ பேர் இருக்க
பொம்மை ராவணர்களை விடாமல்
எரித்துக் கொண்டிருக்கிறோம்.
எரிய வேண்டிய ராவணர்கள்
நிம்மதியாய் உலவிக்கொண்டிருக்க
அப்பாவி அணில்கள்
எரிந்து கொண்டிருக்கின்றன.
எரியட்டும் ராவணர்கள் - நான்
எதிரியில்லை சம்பிரதாயத்திற்கு
எரியும் ராவணர்களுடன் சேர்த்து
மனம் சுமக்கும் மதவெறி
இரத்தவெறி எரித்து விடுங்கள்.
எரிந்த சாம்பலில் இருந்து
பீனிக்ஸ் பறவையாய்
எழுந்து வாழட்டும்
மனித நேயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக