இழப்புகள் - அ.சிவகாமசுந்தரி
தாய்மடியை இழந்தேன்
தவழ ஆரம்பித்தேன்
தந்தையின்பிடியை இழந்தேன்
தனியே நடந்தேன்
கனவுகளை இழந்தேன்
கல்வியைப் பெற்றேன்
தனிமையை இழந்தேன்
உறவுகளை அடைந்தேன்
உறவுகளை இழந்தேன்
உலகத்தை அறிந்தேன்
மனத்தை இழந்தேன்
காதலை உணர்ந்தேன்
காதலை இழந்தேன்
கவிஞனாய் ஆனேன்
இளமையை இழந்தேன்
அனுபவம் கற்றேன்
ஆசையை இழந்தேன்
அமைதியைப் பெற்றேன்
அமைதியை இழந்தேன்
ஆன்மிகம் அறிந்தேன்
காசை இழந்தேன்
கவலை அடைந்தேன்
கவலையை இழந்தேன்
காலத்தை வென்றேன்
- அ.சிவகாமசுந்தரி