புதன், ஏப்ரல் 07, 2004
மழை-1 துளி-10
ஒரு பட்டாம்பூச்சி எழுப்பிய கேள்வி
-சகாரா ( நன்றி: 'பயணம் புதிது' - அக்டோ பர்-1999 )
நம்பிக்கைகள்
தகர்ந்து கொண்டிருக்கிற காலம்
ஒற்றுமை பற்றி
வேற்றுமை பிதற்றுகிறது
ஒழுங்கை எதிர்த்து
ஒழுங்கீனம் கேள்வியெழுப்புகிறது.
மலர்களை முட்கள்
குத்திக் கிழிக்கின்றன
மாய்மாலம் செய்கிற புகாரின் பேரில்
மனிதாபிமானம் தண்டிக்கப்படுகிறது.
நல்லது கண்டு
அல்லது நகைக்கிறது
மெய்ம்மையை
பொய்மை மென்று தின்கிறது.
ஆகாயத்தை மேகம்
அவமானப் படுத்தத் துடிக்கிறது
அன்பு
அன்புக்காக வக்காலத்து வாங்குவதை
அறிவீனம் கொச்சைப் படுத்துகிறது.
இந்நிலையில்
எனது சிறகுகள் முறிபடுவது குறித்து
யாரிடம் நான்
என்னவென்று சொல்லியழ ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக