புதன், ஏப்ரல் 07, 2004

மழை-1 துளி-9

இலக்கை நோக்கி - அ.சிவகாம சுந்தரி

இலக்கோ ஒரு ஓரம்
பாதையோ வெகு தூரம்
பயணிக்கிறேன் நான்
இலக்கை நோக்கி

காடுகள் மலைகள்
நதிகளைக் கடந்தேன்
இப்பொழுது கண்ணெதிரெ
இருப்பதெல்லாம் பாலைவனம்

கண்கள் குருடாக
கால்கள் தடுமாற
நிலைகவிழும் நிலையில்
நெடுந்தொலைவில் ஒரு மரம்

பாதையும் மறந்து
பயணமும் மறந்து
இப்பொழுது நான்
நிழலை நோக்கி


அ.சிவகாம சுந்தரி