புதன், ஏப்ரல் 07, 2004

மழை-1 துளி-4


படையல்-சகாரா
(முள்ளின் நுனியிலும் ஆகாயங்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து)

அடியெடுத்துக் கொடுக்க
எந்த ஆண்டவனுக்கும்
சக்தி இல்லை.

கவிதை பாடிக் கேட்க
எந்தச் சடையப்பனுக்கும்
நேரமில்லை.

ஆயிரம்பொன் பரிசளிக்க
எந்தப் பாண்டியனுக்கும்
மனமில்லை.

நக்கீரர்கள் இருக்கும் வரை
வரும்பரிசும்
நமக்கில்லை.

மேலும்
நமக்கு வேண்டாம் -
அடுத்தவனின் பழுதுப்பாட்டு.

பிழையுள்ள பாட்டாயினும்
உன்பாட்டை
நீயே எழுது தருமியே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக