வெள்ளி, ஜூன் 07, 2013

மழை-8, துளி-3 : காற்றுக் குடித்த மூச்சு


காற்றுக் குடித்த மூச்சு - சகாரா
நாள்தோறும்
நாலுபேர்
பார்க்க
பேச
சிரிக்க
பார்த்துப் பேச
பேசிப் பார்க்க
சிரித்துப் பேச
பேசிச் சிரிக்க
சிரித்துப்பார்க்க
பார்த்துச் சிரிக்க
எத்தனைபேர்
கனவில்
என் இருப்பு ?
எத்தனை பேர்
இருப்பில்
என் கனவு?

நன்றி: முள்ளின் நுனியிலும் ஆகாயம் கவிதைத் தொகுப்பு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக